சீனா அணு ஆயுதங்களை வேகமாக விரிவுபடுத்துகிறது 

June 14, 2023

அணு ஆயுதங்களை சீனா வேகமாக விரிவுபடுத்துவதாக எஸ்ஐபிஆர்ஐ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்ஐபிஆர்ஐ நேற்று முன்தினம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் சீனாவிடம் உள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 410 ஆக உயர்ந்துள்ளது. பாகிஸ்தானிடம் 170 அணு ஆயுதங்கள் உள்ளன. இந்தியாவிடம் 164 அணு ஆயுதங்கள் உள்ளன. பாகிஸ்தான் தனது அணு ஆயுதங்களை மெதுவாக விரிவுபடுத்துகிறது என்றாலும், சீனா தனது அணு ஆயுதங்களை தொடர்ந்து வேகமாக விரிவுபடுத்தி வருகிறது. ஆனால், இந்தியா புதிய தலைமுறை அக்னி ஏவுகணைகள் மற்றும் அணு […]

அணு ஆயுதங்களை சீனா வேகமாக விரிவுபடுத்துவதாக எஸ்ஐபிஆர்ஐ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்ஐபிஆர்ஐ நேற்று முன்தினம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் சீனாவிடம் உள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 410 ஆக உயர்ந்துள்ளது. பாகிஸ்தானிடம் 170 அணு ஆயுதங்கள் உள்ளன. இந்தியாவிடம் 164 அணு ஆயுதங்கள் உள்ளன. பாகிஸ்தான் தனது அணு ஆயுதங்களை மெதுவாக விரிவுபடுத்துகிறது என்றாலும், சீனா தனது அணு ஆயுதங்களை தொடர்ந்து வேகமாக விரிவுபடுத்தி வருகிறது. ஆனால், இந்தியா புதிய தலைமுறை அக்னி ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் ரபேல் போர் விமானங்களை படையில் சேர்த்ததன் மூலம் தாக்குதலை தடுக்கும் திறனில் நம்பிக்கையுடன் உள்ளது.

இந்தியாவிடம் தற்போது ஐஎன்எஸ் அரிஹன்ட் என்ற ஒரே ஒரு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. ஆனால், அமெரிக்கா, ரஷ்யா, சீனாவிடம் அதிக எண்ணிக்கை அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன. இவற்றில் இருந்து 5,000 கி.மீ சென்று தாக்கும் ஏவுகணைகளை ஏவ முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu