கொரோனா பரவலுக்கு சீனாவே காரணம் - அமெரிக்கா உளவு அமைப்பு

March 1, 2023

சீனாவில் உகான் நகரில் உள்ள ஹுனன் மார்க்கெட்டில் இருந்துதான் கொரோனா உருவானதாக கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் சீன அதிகாரிகள் அடையாளம் கண்டறிந்தனர். அமெரிக்க விஞ்ஞானிகள் சிலர் கொரோனா வைரஸ் எப்படி உருவானது என்று 3 ஆய்வுகளை நடத்தினர். அவற்றின் முடிவுகளை வெளியிட்டுள்ளனர். அவற்றில் 2 ஆய்வுகளில், உகான் நகரில் உயிருடன் பாலூட்டி ரக விலங்குகளை விற்கும் ஹுனன் மொத்த மார்க்கெட்டில் இருந்துதான் கொரோனா பரவியதாக அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். சீனாவின் உகானில் உள்ள நுண்கிருமிகள் ஆய்வகத்தில் […]

சீனாவில் உகான் நகரில் உள்ள ஹுனன் மார்க்கெட்டில் இருந்துதான் கொரோனா உருவானதாக கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் சீன அதிகாரிகள் அடையாளம் கண்டறிந்தனர்.

அமெரிக்க விஞ்ஞானிகள் சிலர் கொரோனா வைரஸ் எப்படி உருவானது என்று 3 ஆய்வுகளை நடத்தினர். அவற்றின் முடிவுகளை வெளியிட்டுள்ளனர். அவற்றில் 2 ஆய்வுகளில், உகான் நகரில் உயிருடன் பாலூட்டி ரக விலங்குகளை விற்கும் ஹுனன் மொத்த மார்க்கெட்டில் இருந்துதான் கொரோனா பரவியதாக அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். சீனாவின் உகானில் உள்ள நுண்கிருமிகள் ஆய்வகத்தில் ஏற்பட்ட கசிவால் தான் கொரோனா பரவியதாக அமெரிக்காவின் புலன் விசாரணை அமைப்பான எப்பிஐ தெரிவித்துள்ளது.

உலகையே சுமார் 2 ஆண்டுகள் முடக்கிய கொரோனா நோய் தொற்றுக்கான ஆரம்பப் புள்ளியாக சீனாவே இருந்ததாக எப்பிஐ இயக்குநர் கிறிஸ்டோபர் ரே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கிறிஸ்டோபர் ரே கூறியதாவது:- எப்.பி.ஐயின் விசாரணையின் பெரும்பாலான விவரங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. தொற்றுநோயின் தோற்றம் குறித்து ஆராய்வதில் சீன அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவது கடினம். சீன அரசு அமெரிக்காவை குழப்பமடையச் செய்வதற்கு தன்னால் இயன்றதைச் செய்து வருவதாக எனக்குத் தோன்றுகிறது என கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu