உலகின் அதிவேக இணைய சேவையை அறிமுகம் செய்தது சீனா

November 16, 2023

உலகின் அதிவேக இணைய சேவை சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இணைய சேவையின் வேகத்தின் மூலம், ஒரு வினாடியில் 150 திரைப்படங்களை பரிமாற்றம் செய்ய முடியும் என கூறப்படுகிறது. சிங்குவா பல்கலைக்கழகம், சைனா மொபைல், ஹூவாய் டெக்னாலஜிஸ், செர்னெட் கார்ப்பரேஷன் ஆகியவற்றின் கூட்டணியில், இந்த அதிவேக இணைய சேவை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணைய சேவை, ஒரு வினாடிக்கு 1.2 டெராபைட் தகவல்களை பரிமாற்றம் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், உலகில் உள்ள பல்வேறு இணைய சேவைகளை […]

உலகின் அதிவேக இணைய சேவை சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இணைய சேவையின் வேகத்தின் மூலம், ஒரு வினாடியில் 150 திரைப்படங்களை பரிமாற்றம் செய்ய முடியும் என கூறப்படுகிறது.
சிங்குவா பல்கலைக்கழகம், சைனா மொபைல், ஹூவாய் டெக்னாலஜிஸ், செர்னெட் கார்ப்பரேஷன் ஆகியவற்றின் கூட்டணியில், இந்த அதிவேக இணைய சேவை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணைய சேவை, ஒரு வினாடிக்கு 1.2 டெராபைட் தகவல்களை பரிமாற்றம் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், உலகில் உள்ள பல்வேறு இணைய சேவைகளை காட்டிலும், இது பத்து மடங்கு கூடுதல் வேகத்துடன் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 3000 கிலோமீட்டர் தொலைவுக்கு, பீஜிங், வூஹான் போன்ற முக்கிய நகரங்களை இணைத்து, இந்த இணைய சேவை வழங்கப்படுகிறது. ஆப்டிகல் பைபர் கேபிள் மூலமாக இந்த சேவை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu