கடந்த 20 ஆண்டுகளில், கிட்டத்தட்ட 240 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான கடனை, சீனா, 22 வளரும் நாடுகளுக்கு வழங்கியுள்ளதாக, புதிய அறிக்கை ஒன்று வெளிவந்துள்ளது. குறிப்பாக, பெல்ட் அண்ட் ரோடு திட்டத்திற்காக இந்த கடன் தொகை வழங்கப்பட்டுள்ளது. தங்கள் நாட்டில் இந்தத் திட்டத்திற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்த, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் சீனாவிடம் இருந்து கடன் பெற்றுள்ளன. இந்நிலையில், இந்த நாடுகள் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதால், சீனாவின் கடன் குறித்து சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
கடந்த 2016 முதல் 2021 வரை, கிட்டத்தட்ட 80% கடன் தொகையை சீனா பிற நாடுகளுக்கு வழங்கியுள்ளது. குறுகிய காலத்தில் வணிக கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்காக இந்த கடன் தொகை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையால் சர்ச்சை ஏற்படவே, “நாங்கள் எந்த நாட்டையும் கடன் பெறுமாறு நிர்பந்திக்கவில்லை” என்று சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.