சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில், இந்தியாவின் லக்ஷயா சென் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறினார்.
சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெற்று வரும் சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில், இந்தியா சார்பில் லக்ஷயா சென், பி.வி.சிந்து, சாத்விக்-சிராக் இணை போன்றோர் பங்கேற்றுள்ளனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் லக்ஷயா சென் தனது முதல் சுற்றில் பிரான்ஸ் வீரர் தோமா பாப்போவ்-ஐ எதிர்கொண்டார். இப்போட்டியில், ஆதிக்கம் செலுத்திய தோமா பாப்போவ் 21-11, 21-10 என்ற நேர் செட்கணக்கில் எளிதாக வென்றார். இதன் காரணமாக, லக்ஷயா சென் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.
இந்தத் தோல்வி, லக்ஷயா சென்னின் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனினும், இந்தியாவின் மற்ற வீரர்கள் போட்டியில் சிறப்பாகச் செயல்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.