ஷாங்காய் நகரில் செயல்பட்டு வரும் ஷியாகோ என்ற ஊடக குழு, நகைச்சுவை கலைஞர்களை ஊக்குவித்து, நகைச்சுவை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அண்மையில், சீனத் தலைநகர் பீஜங்கில், இந்தக் குழுவின் நகைச்சுவை நிகழ்ச்சி நடந்தது. அப்போது, லி ஹாஷி என்ற கலைஞர், அவரது வளர்ப்பு நாய்கள் அணிலை துரத்துவதைப் பார்த்தால், அவற்றுக்கு போரை வெல்லும் திறன் இருப்பது போல உள்ளது என்று பேசியுள்ளார். இது சீன ராணுவத்தை மறைமுகமாக கேலி செய்வது போல் உள்ளதாக விமர்சிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த காணொளி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.
இது தொடர்பாக வழக்கு பதியப்பட்டு, ஷியாகோ குழுவினருக்கு 17 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த குழுவின் அனைத்து நிகழ்ச்சிகளும் காலவரையின்றி ரத்து செய்யப்பட்டுள்ளன. பீஜிங் கலாச்சாரம் மற்றும் சுற்றுலா பணியகம், இந்தக் குழு தேசிய உணர்வுகளை புண்படுத்தி விட்டதாக குற்றம் சாட்டி, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.