மக்கள் நடத்தும் அமைதி போராட்டத்திற்கு சீனா மதிப்பளிக்க வேண்டும் - ஐ.நா. சபை

November 30, 2022

மக்கள் நடத்தும் அமைதி போராட்டத்திற்கு சீனா மதிப்பளிக்க வேண்டும் என ஐ.நா.சபை வலியுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் சீனாவில் வேகமாக பரவி வருகிறது. அங்கு கடந்த சில நாட்களாக 40 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. வைரஸ் பரவல் அதிகரிப்பால் கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை சீனா விதித்து வருகிறது. இதற்கிடையே, சீன அரசு விதித்துள்ள கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக அங்குள்ள மக்கள் போராட்டத்தில் குதித்தனர். அவர்கள் சீன அரசுக்கு எதிராகவும், கொரோனா ஊரடங்கு […]

மக்கள் நடத்தும் அமைதி போராட்டத்திற்கு சீனா மதிப்பளிக்க வேண்டும் என ஐ.நா.சபை வலியுறுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் சீனாவில் வேகமாக பரவி வருகிறது. அங்கு கடந்த சில நாட்களாக 40 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. வைரஸ் பரவல் அதிகரிப்பால் கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை சீனா விதித்து வருகிறது. இதற்கிடையே, சீன அரசு விதித்துள்ள கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக அங்குள்ள மக்கள் போராட்டத்தில் குதித்தனர். அவர்கள் சீன அரசுக்கு எதிராகவும், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தவும் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை போலீசார் கைது செய்தனர். சீன அரசும் சில தளர்வுகளை கொண்டு வர சம்மதித்துள்ளது.

இதற்கிடையே, கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டம் சீனா முழுவதும் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைதி வழியில் போராடும் மக்களின் உணர்வுகளுக்கு சீன ஆட்சியாளர்கள் உரிய மதிப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu