கிழக்கு லடாக்கில் பதற்றத்தை குறைக்கும் வகையில் இந்தியா சீனாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
2020-ம் ஆண்டு ஜூன் மாதம் லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா மற்றும் சீனாவின் ராணுவ வீரர்களுக்கிடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. அதற்கு பின்னர், கிழக்கு லடாக்கின் உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (LAC) பகுதியில் இரு நாடுகளும் படை வீரர்களை குவிக்கத் தொடங்கின. இதனால், சுமார் நான்கு ஆண்டுகளாக இங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்த சூழலில், கிழக்கு லடாக்கில் பதற்றத்தை குறைக்கும் வகையில் இந்தியா சீனாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் லின் ஜியான், இதற்கான உறுதிப்பத்திரம் வெளியிட்டார். அவர் கூறுகையில், "சீனா மற்றும் இந்தியா இடையே தூதரக மற்றும் ராணுவ வழிகள் மூலமாக பேச்சுவார்த்தைகள் நடந்து வந்துள்ளன. தற்போது இரு தரப்பினருக்குமான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.