டெல்லியில் நடந்த குவாட் அமைப்பு கூட்டதிற்கு சீனா எதிர்ப்பு

டெல்லியில் நடந்த குவாட் அமைப்பு கூட்டதிற்கு சீனா மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. டெல்லியில் இரண்டு நாட்கள் நடைபெற்ற ஜி20 வெளியுறவுத்துறை மந்திரிகள் கூட்டத்தை தொடர்ந்து, குவாட் அமைப்பின் வெளியுறவுத்துறை மந்திரிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் போது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் ஜப்பான் வெளியுறவு மந்திரிகள் கூட்டறிக்கை வெளியிட்டனர். உக்ரைன் மோதல், கிழக்கு மற்றும் தென் சீனக் கடல்களின் நிலைமையை குறிப்பிட்டுள்ளனர். சட்டத்தின் ஆட்சி, இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் மோதல்களுக்கு அமைதியான முறையில் தீர்வு […]

டெல்லியில் நடந்த குவாட் அமைப்பு கூட்டதிற்கு சீனா மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

டெல்லியில் இரண்டு நாட்கள் நடைபெற்ற ஜி20 வெளியுறவுத்துறை மந்திரிகள் கூட்டத்தை தொடர்ந்து, குவாட் அமைப்பின் வெளியுறவுத்துறை மந்திரிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் போது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் ஜப்பான் வெளியுறவு மந்திரிகள் கூட்டறிக்கை வெளியிட்டனர். உக்ரைன் மோதல், கிழக்கு மற்றும் தென் சீனக் கடல்களின் நிலைமையை குறிப்பிட்டுள்ளனர்.

சட்டத்தின் ஆட்சி, இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் மோதல்களுக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பது தொடர்பான கொள்கைகளை தீவிரமாக ஆதரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்துள்ள சீனா, குவாட் அமைப்புக்கு மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஒரு நாட்டிற்கும் இன்னொரு நாட்டுக்குமான ஒத்துழைப்பு என்பது, அமைதி மற்றும் வளர்ச்சியின் போக்கிற்கு ஒத்துப்போவதாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu