உலக அளவில் தங்க நகை நுகர்வில் சீனா முதலிடம் பிடித்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டில், தங்க நகை நுகர்வில் சீனா சாதனை படைத்துள்ளது. இதுவரையில் தங்க நகை நுகர்வில் முதலிடத்தில் இருந்து வந்த இந்தியாவை சீனா பின்னுக்குத் தள்ளி உள்ளது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியாவின் தங்க நகை தேவை 600.56 டன் அளவில் இருந்தது. இதுவே சீனாவின் தேவை 570.8 டன் அளவில் தான் இருந்தது. ஆனால், 2023 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்க நகை நுகர்வு 562.3 டன் அளவிலும், சீனாவின் தங்க நகை நுகர்வு 630 டன் அளவிலும் பதிவாகியுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு தங்க நகை விலைமதிப்பு தொடர்ந்து உயர்ந்து வந்தாலும் கூட சீனாவில் நுகர்வு அதிகரித்துள்ளது. ஆனால், அதே காரணத்தினால் இந்தியாவில் தங்க நகை நுகர்வு வீழ்ச்சி அடைந்துள்ளது.