அமெரிக்காவில் நடைபெறும் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக, சீன அதிபர் ஜின்பிங் அமெரிக்க பயணம் மேற்கொண்டு உள்ளார்.
அமெரிக்காவில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று சந்திக்க உள்ளார். அமெரிக்கா மற்றும் சீனா இடையே கடும் மோதல் நிலவி வரும் சூழலில், இருநாட்டு தலைவர்களும் சந்தித்துக் கொள்வது மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அவர்களின் சந்திப்பின்போது உக்ரைன் ரஷ்யா போர், வடகொரியா விவகாரம், தைவான் சீனா மோதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.