கஜகஸ்தானில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங் பங்கேற்க இருக்கிறார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, இந்தியா, கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய எட்டு நாடுகள் இடம் பெற்றுள்ளன. இந்த அமைப்பு செல்வாக்கு மிகுந்த பொருளாதார மற்றும் பாதுகாப்பு அமைப்பாக இருக்கிறது. இந்த அமைப்பின் 24 ஆவது உச்சி மாநாடு கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் ஜூலை 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங் பங்கேற்க உள்ளார். அதோடு அவர் தஜிகிஸ்தானுக்கும் அரசு பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த மாநாட்டில் உக்ரைன் போர், ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழல், இந்த அமைப்பில் உள்ள நாடுகள் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல் போன்ற விவகாரங்கள் விவாதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தியா சார்பில் இந்த மாநாட்டில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்க உள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.














