சீனா - ஒரே நாளில் 37 மில்லியன் கொரோனா பாதிப்புகள்

December 24, 2022

உலக அளவில் பிரபல இதழான ப்ளூம்பெர்க், சீனாவில் டிசம்பர் 20ஆம் தேதி ஒரே நாளில் 37 மில்லியன் கொரோனா பாதிப்புகள் பதிவாகி இருக்கலாம் என்று தெரிவித்துள்ளது. மேலும், டிசம்பர் மாதத்தின் முதல் 20 நாட்களில், 248 மில்லியன் சீனர்கள் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி இருக்கலாம் என்று ப்ளூம்பெர்க் அறிக்கை தெரிவித்துள்ளது. சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் அதிகாரங்கள் கூட்டத்தில் கிடைத்த தகவல்கள் மூலம் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. ஆனால், சீனாவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அன்றைய […]

உலக அளவில் பிரபல இதழான ப்ளூம்பெர்க், சீனாவில் டிசம்பர் 20ஆம் தேதி ஒரே நாளில் 37 மில்லியன் கொரோனா பாதிப்புகள் பதிவாகி இருக்கலாம் என்று தெரிவித்துள்ளது. மேலும், டிசம்பர் மாதத்தின் முதல் 20 நாட்களில், 248 மில்லியன் சீனர்கள் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி இருக்கலாம் என்று ப்ளூம்பெர்க் அறிக்கை தெரிவித்துள்ளது. சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் அதிகாரங்கள் கூட்டத்தில் கிடைத்த தகவல்கள் மூலம் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. ஆனால், சீனாவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அன்றைய தினத்தில் 3049 கொரோனா பாதிப்புகள் மட்டுமே இருந்ததாக பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் கடந்த ஜனவரி மாதம் பதிவான அதிகபட்ச ஒரு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 மில்லியன் ஆகும். அதை, தற்போதைய 37 மில்லியன் எண்ணிக்கை முறியடித்து விட்டதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. அத்துடன், இனிவரும் வாரங்களில், லட்சக்கணக்கான சீன மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படலாம் என்று பெருந்தொற்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu