சீன ராக்கெட்டின் பாகங்கள் பூமியில் விழும் அபாயம்

November 5, 2022

சீனா, விண்வெளியில் சொந்தமாக விண்வெளி நிலையம் ஒன்றை அமைத்து வருகிறது. அதன் கட்டமைப்பு பணிகளுக்காக, கடந்த அக்டோபர் 31ஆம் தேதி, லாங் மார்ச் 5பி என்ற ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது. இந்த ராக்கெட்டின் பாகம், அதன் சுற்றுவட்ட பாதையில் இருந்து விலகி, கட்டுப்பாட்டை இழந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த பாகம் பூமியில் விழக்கூடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர், “லாங் மார்ச் 5பி வகை ராக்கெட், […]

சீனா, விண்வெளியில் சொந்தமாக விண்வெளி நிலையம் ஒன்றை அமைத்து வருகிறது. அதன் கட்டமைப்பு பணிகளுக்காக, கடந்த அக்டோபர் 31ஆம் தேதி, லாங் மார்ச் 5பி என்ற ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது. இந்த ராக்கெட்டின் பாகம், அதன் சுற்றுவட்ட பாதையில் இருந்து விலகி, கட்டுப்பாட்டை இழந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த பாகம் பூமியில் விழக்கூடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர், “லாங் மார்ச் 5பி வகை ராக்கெட், பிரத்தியேக வடிவமைப்பு அம்சங்களை கொண்டுள்ளது. இதனால், இந்த ராக்கெட்டின் பாகங்கள் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும் பொழுது, முழுவதும் எரிந்து சாம்பல் ஆகிவிடும். இது பூமியின் நிலப்பகுதியை எட்டாது. இதனால் நிலப்பகுதிக்கு எந்தவித பாதிப்புகளும் நேராது. அதேபோல், விமான நடவடிக்கைகளுக்கும் எந்த வித தீங்கும் நேராது. விமான பாதைகளுக்கு வரும் முன்னரே ராக்கெட்டின் பாகங்கள் எரிந்து சாம்பல் ஆகிவிடும்” என்று கூறியுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில், சீன ராக்கெட்டின் பாகங்கள் கட்டுப்பாட்டை இழந்து பூமியில் விழுவது இது நான்காவது முறையாகும். விண்வெளி குப்பைகள், பூமிக்குள் விழுந்து பாதிப்பை ஏற்படுத்துவது குறைந்த அளவில் இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில், 10000ல் ஒருவருக்கு மிகாமல் இந்த பாதிப்பு விகிதம் இருக்க வேண்டும் என்ற விதி கடைபிடிக்கப்படுகிறது. ஆனால், சீனாவின் இந்த தொடர் நிகழ்வுகள் இந்த விதிகளை மீறுவதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu