கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வரும் பாகிஸ்தானுக்கு சீனா 600 மில்லியன் டாலர்கள் கடனை வழங்கி உள்ளது. இதன் மூலம், பாகிஸ்தான் நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு மேலும் உயர்ந்து உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் சபாஷ் ஷரீப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு 5 பில்லியனுக்கும் மேலான கடன் தொகையை சீனா ஏற்கனவே வழங்கியுள்ளது. தற்போது, கூடுதலாக இந்த 600 மில்லியன் கடன் தொகை வழங்கப்படுகிறது. சீனா தவிர, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளும் பாகிஸ்தானுக்கு நிதி உதவி வழங்குகின்றன. அவை கிட்டத்தட்ட 3 பில்லியன் டாலர்கள் அளவில் கூறப்பட்டுள்ளது. எனவே, பாகிஸ்தானின் பொருளாதாரம் மீண்டெழுந்து சகஜ நிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.