சீனா, விண்வெளியில் சொந்தமாக அமைத்துள்ள டியாங்காங் விண்வெளி நிலையத்திற்கு 3 சீன விண்வெளி வீரர்கள் பயணித்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை, சீனாவின் ஜியூகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து, லாங் மார்ச் 2எப் ராக்கெட் மூலம், செஞ்சோவ் 15 அல்லது தெய்வீக களம் எனப்படும் விண்கலத்தில் சீன வீரர்கள் சென்றனர். சீன விண்வெளி நிலைய கட்டமைப்பு திட்டத்தில் இது இறுதி பயணம் ஆகும். கடந்த ஜூன் மாதம், விண்வெளிக்கு அனுப்பப்பட்ட வீரர்களின் பணியை இந்த மூன்று வீரர்கள் மேற்கொள்ளத் தொடங்குவர். இவர்கள் ஆறு மாத காலத்திற்கு அங்கு தங்கியிருப்பர் என்று கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே விண்வெளியில் உள்ள வீரர்கள், டிசம்பர் மாதத்தில் பூமிக்கு திரும்ப உள்ளனர். அதுவரையில் டியாங்காங் விண்வெளி நிலையத்தில் ஆறு விண்வெளி வீரர்கள் ஒரே நேரத்தில் தங்க உள்ளனர். இது சீனாவின் வரலாற்று தருணம் ஆகும்.