தைவான் - சீனா எல்லையில் பதற்றம் அதிகரிப்பு

April 8, 2023

சீனாவின் எதிர்ப்பை மீறி, தைவான் அதிபர் ட்சய் இங் வென் அமெரிக்கா சென்று, அந்நாட்டு உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன் காரணமாக கோபமடைந்த சீனா, தைவான் எல்லையில் போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளது. அண்மைக்காலமாக, தைவான் மற்றும் அமெரிக்கா இடையே நெருக்கம் பதிவு செய்யப்படும் போதெல்லாம், சீனா மிரட்டல் விடுத்து வருகிறது. தைவானின் வான் எல்லைக்குள் சீனப் போர் விமானங்களை அனுப்புவது மற்றும் கடல் எல்லைப் பகுதியில் போர்க்கப்பல்களை ரோந்து விடுவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு […]

சீனாவின் எதிர்ப்பை மீறி, தைவான் அதிபர் ட்சய் இங் வென் அமெரிக்கா சென்று, அந்நாட்டு உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன் காரணமாக கோபமடைந்த சீனா, தைவான் எல்லையில் போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளது.

அண்மைக்காலமாக, தைவான் மற்றும் அமெரிக்கா இடையே நெருக்கம் பதிவு செய்யப்படும் போதெல்லாம், சீனா மிரட்டல் விடுத்து வருகிறது. தைவானின் வான் எல்லைக்குள் சீனப் போர் விமானங்களை அனுப்புவது மற்றும் கடல் எல்லைப் பகுதியில் போர்க்கப்பல்களை ரோந்து விடுவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. தற்போது, சீன போர்க்கப்பல்கள் இருநாட்டு கடல் எல்லையில் போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளதால், சீனா - தைவான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், “சீனாவின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிய போவதில்லை” என தைவானும், “தைவான், சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி. தாய் மண்ணுடன் இணைவதை நோக்கியே தைவான் எதிர்காலம் உள்ளது” என்று சீனாவும் கூறி வருகின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu