தைவானை அச்சுறுத்த போர் விமானங்கள், கப்பல்களை அனுப்பிய சீனா

February 3, 2023

தைவானுக்கு சீன போர் விமானங்களும், கப்பல்களும் விரைந்ததால் புதிய பதற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தைவானை நோக்கி சீனா 23 போர் விமானங்களையும், 4 போர்க் கப்பல்களையும் அனுப்பி உள்ளது. இதனால் அங்கு புதிய பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை தைவான் ராணுவ அமைச்சகம் வெளியிட்டு இருக்கிறது. இது குறித்து தைவான் ராணுவ அமைச்சகம் கூறி இருப்பதாவது:- சீனாவின் 23 போர் விமானங்கள், 4 போர்க்கப்பல்கள் தைவான் சுற்றுப்புறங்களில் இன்று காலை 6 மணி […]

தைவானுக்கு சீன போர் விமானங்களும், கப்பல்களும் விரைந்ததால் புதிய பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தைவானை நோக்கி சீனா 23 போர் விமானங்களையும், 4 போர்க் கப்பல்களையும் அனுப்பி உள்ளது. இதனால் அங்கு புதிய பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை தைவான் ராணுவ அமைச்சகம் வெளியிட்டு இருக்கிறது. இது குறித்து தைவான் ராணுவ அமைச்சகம் கூறி இருப்பதாவது:- சீனாவின் 23 போர் விமானங்கள், 4 போர்க்கப்பல்கள் தைவான் சுற்றுப்புறங்களில் இன்று காலை 6 மணி வரை கண்டறியப்பட்டள்ளன. இரண்டு 'ஜே-11' போர் விமானங்கள், எட்டு ஜே-16 போர் விமானங்கள், மூன்று எஸ்யு-30 போர் விமானங்கள் உள்ளிட்ட 17 சீன போர் விமானங்கள், ஒரு பிஇசட்கே-005 டிரோன் தைவான் ஜலசந்தியின் இடைநிலைக்கோடு பகுதியை கடந்தன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தைவான் பதிலடியாக, நிலைமையைக் கண்காணிக்க வான் மற்றும் கடல் ரோந்துகளை வலுப்படுத்தி உள்ளது. தவிரவும், நிலத்திலும் ஏவுகணை அமைப்புகளை நிறுவி இருகிறது என தகவல்கள் கூறுகின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu