ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் - போட்டியாக களமிறங்கும் சீனாவின் செயற்கைக்கோள்கள்

எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், 3500 செயற்கைக்கோள்களை உள்ளடக்கிய ஸ்டார்லிங்க் என்ற செயற்கைக்கோள் கூட்டத்தை கட்டமைத்து வருகிறது. இந்தக் கட்டமைப்பு பூமியைச் சுற்றி வரும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இதற்கு போட்டியாக, சீனா, லோ எர்த் ஆர்பிட் - லியோ செயற்கைக்கோள்களை நிறுவ உள்ளதாக தெரிவித்துள்ளது. சீனா அமைக்க திட்டமிட்டுள்ள இந்த செயற்கைக்கோள் கூட்டத்தில், ஆயிரக்கணக்கான (கிட்டத்தட்ட 13,000) செயற்கைக்கோள்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. சீனாவைச் சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான காசிக் - […]

எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், 3500 செயற்கைக்கோள்களை உள்ளடக்கிய ஸ்டார்லிங்க் என்ற செயற்கைக்கோள் கூட்டத்தை கட்டமைத்து வருகிறது. இந்தக் கட்டமைப்பு பூமியைச் சுற்றி வரும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இதற்கு போட்டியாக, சீனா, லோ எர்த் ஆர்பிட் - லியோ செயற்கைக்கோள்களை நிறுவ உள்ளதாக தெரிவித்துள்ளது. சீனா அமைக்க திட்டமிட்டுள்ள இந்த செயற்கைக்கோள் கூட்டத்தில், ஆயிரக்கணக்கான (கிட்டத்தட்ட 13,000) செயற்கைக்கோள்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

சீனாவைச் சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான காசிக் - CASIC, வரும் செப்டம்பர் மாதம் இதற்கான பணிகளைத் தொடங்கும் என்று செய்திகள் வெளிவந்துள்ளன. மேலும், சீனாவின் செயற்கைக்கோள்கள், பூமியின் மேற்பரப்பில் இருந்து 150 முதல் 300 கிலோமீட்டர் உயரத்தில் நிறுவப்படும் என்று சொல்லப்படுகிறது. ஆனால், வரும் 2027 ஆம் ஆண்டுக்குள், சீனாவால் 4000 எண்ணிக்கையில் மட்டுமே செயற்கைக்கோள்களை செலுத்த முடியும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu