சீனா, விண்வெளியில், பிரத்யேகமாக விண்வெளி நிலையம் ஒன்றை அமைத்து வருகிறது. தியாங்காங் என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த விண்வெளி நிலையத்திற்கு, விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டத்தில் சீனா ஈடுபட்டுள்ளது. அதன்படி, முதல் முறையாக, பொதுமக்களில் ஒருவரை விண்ணுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
சீனா சார்பாக இதுவரை விண்ணுக்கு அனுப்பப் பட்டவர்கள் அனைவரும் மக்கள் விடுதலை இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஆவர். தற்போது, முதல் முறையாக, மக்களில் ஒருவராக, பீஜிங் பல்கலைக்கழகத்தின் ஏரோநாட்டிக்கல் பிரிவு பேராசிரியர் கய் ஹாய்சோ விண்ணுக்கு செல்ல உள்ளார். இந்த திட்டத்தின் கமாண்டராக ஜிங்க் ஹைபெங் அறிவிக்கப்பட்டுள்ளார். மூன்றாவதாக, இந்த குழுவில், ஜூ யாங்ஜூ அறிவிக்கப்பட்டுள்ளார். அவர்கள் மூவரும், நாளை காலை 9:30 மணி அளவில் விண்வெளிப் பயணத்தை தொடங்க உள்ளனர். இதற்கான கவுண்டவுன் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.