சீனா, தனது விண்வெளி நிலையத்திற்கு சரக்கு விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பியது

November 12, 2022

சீனா சொந்தமாக டியாங்காங் என்ற விண்வெளி நிலையத்தை அமைத்து வருகிறது. நிலையத்திற்கான உபகரணங்களை தியான்ஹோ 5 என்ற சரக்கு விண்கலம் மூலம் விண்ணில் செலுத்தியுள்ளது. சனிக்கிழமை ஏவப்பட்ட இந்த விண்கலம், வெற்றிகரமாக, பூமியின் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லாங் மார்ச் 7 ஒய் 6 என்ற ராக்கெட் மூலம் இந்த விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. ஹய்னான் பகுதியில் உள்ள ராக்கெட் ஏவு தளத்தில் இருந்து செலுத்தப்பட்ட இந்த விண்கலம், கணிக்கப்பட்ட சுற்றுவட்ட பாதையை எட்டி உள்ளதாக […]

சீனா சொந்தமாக டியாங்காங் என்ற விண்வெளி நிலையத்தை அமைத்து வருகிறது. நிலையத்திற்கான உபகரணங்களை தியான்ஹோ 5 என்ற சரக்கு விண்கலம் மூலம் விண்ணில் செலுத்தியுள்ளது. சனிக்கிழமை ஏவப்பட்ட இந்த விண்கலம், வெற்றிகரமாக, பூமியின் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாங் மார்ச் 7 ஒய் 6 என்ற ராக்கெட் மூலம் இந்த விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. ஹய்னான் பகுதியில் உள்ள ராக்கெட் ஏவு தளத்தில் இருந்து செலுத்தப்பட்ட இந்த விண்கலம், கணிக்கப்பட்ட சுற்றுவட்ட பாதையை எட்டி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தானியங்கி முறையில் டியாங்காங் விண்வெளி நிலையத்துடன் இணைந்து கொள்ளும் எனவும் கூறப்பட்டுள்ளது. விண்வெளி நிலைய கட்டமைப்புக்கு தேவையான உபகரணங்கள் இந்த விண்கலத்தில் அனுப்பப்பட்டுள்ளன. இந்த விண்வெளி நிலையம் கட்டமைக்கப்பட்டவுடன், தனியாக விண்வெளியில் நிலையம் வைத்துள்ள ஒரே நாடாக சீனா மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu