விண்வெளியில் தனக்கென பிரத்தியேக விண்வெளி நிலையத்தை சீனா அமைத்து வருகிறது. டியாங்காங் என அழைக்கப்படும் இந்த விண்வெளி நிலையத்தின் முதல் புகைப்படத்தை தற்போது சீனா வெளியிட்டுள்ளது.
Shenzhou 16 திட்டத்தில் விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்ட வீரர்கள், பூமிக்கு திரும்பும் பாதையில் டியாங்காங் விண்வெளி நிலையத்தை புகைப்படம் எடுத்துள்ளனர். அதி நவீன கேமரா தொழில்நுட்பத்தில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதனை சீனா தற்போது பகிர்ந்துள்ளது. டியாங்காங் விண்வெளி நிலையத்தின் முழு பகுதியும் இந்த புகைப்படத்தில் காணப்படுகிறது. டியாங்காங் விண்வெளி நிலையம் பூமியிலிருந்து 340 முதல் 450 கிலோமீட்டர் தூரத்தில், சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.