சீனா விண்வெளி உபகரணங்கள் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளதாக கூறியுள்ளது.
விண்வெளிக்கு செயற்கை கோள்கள் அனுப்புவதில் உலக நாடுகளிடையே போட்டி நிலவுகிறது. இதில் சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள் முக்கிய இடம் பிடித்துள்ளன. இந்நிலையில், விண்வெளி உபகரணங்கள், கட்டமைப்பு பாகங்கள், மென்பொருள், விமான உபகரணங்கள் உள்ளிட்டவற்றை ஏற்றுமதி செய்ய சீனா கட்டுப்பாட்டுகளை விதிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சீன வர்த்தக அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தேசிய பாதுகாப்பு மற்றும் அணு ஆயுத பரவல் தடை காரணமாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. ஜூலை 1 முதல் இந்த தடை உத்தரவு அமலுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. அதேபோல் தைவானுக்கு ஆயுதங்களை விற்ற சில அமெரிக்க நிறுவனங்களுக்கும் சீனா பொருளாதார தடை விதித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.