டியாங்காங் விண்வெளி நிலையத்திற்கு குரங்குகளை அனுப்ப சீனா திட்டம்

November 7, 2022

சீனா, விண்வெளியில் சொந்தமாக டியாங்காங் என்ற விண்வெளி நிலையத்தை அமைத்துள்ளது. அங்கு, ஆய்வுக்காக, குரங்குகளை அனுப்ப திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து சீன விஞ்ஞானி ஜாங் லூ கூறியதாவது: “டியாங்காங் விண்வெளி நிலையத்தில் உள்ள ஆய்வகத்தில் இந்த ஆய்வு நடத்தப்பட உள்ளது. மீன்கள், நத்தைகள் உள்ளிட்ட சிறிய விலங்குகளில் ஆய்வு நடத்தப்பட்ட பின்னர், எலிகள் மற்றும் குரங்குகளை அனுப்பி ஆராய்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, பூஜ்ஜிய புவியீர்ப்பு நிலையில், விலங்கினங்களின் வளர்ச்சி மற்றும் […]

சீனா, விண்வெளியில் சொந்தமாக டியாங்காங் என்ற விண்வெளி நிலையத்தை அமைத்துள்ளது. அங்கு, ஆய்வுக்காக, குரங்குகளை அனுப்ப திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து சீன விஞ்ஞானி ஜாங் லூ கூறியதாவது: “டியாங்காங் விண்வெளி நிலையத்தில் உள்ள ஆய்வகத்தில் இந்த ஆய்வு நடத்தப்பட உள்ளது. மீன்கள், நத்தைகள் உள்ளிட்ட சிறிய விலங்குகளில் ஆய்வு நடத்தப்பட்ட பின்னர், எலிகள் மற்றும் குரங்குகளை அனுப்பி ஆராய்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, பூஜ்ஜிய புவியீர்ப்பு நிலையில், விலங்கினங்களின் வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கம் குறித்து இந்த ஆய்வு நடத்தப்படும். மேலும், விண்வெளிச் சூழலுக்கு அவை எவ்வாறு பொருந்தி வாழ்கின்றன என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்படும்” என்று கூறினார்.

இதுபோன்று, விலங்குகளை விண்வெளிக்கு அனுப்பி ஆய்வு செய்வதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, பனிப்போர் நிகழ்ந்த காலத்தில், ரஷ்யாவின் ஆய்வாளர்கள் எலிகளை விண்வெளிக்கு அனுப்பி ஆராய்ச்சி செய்ததை அவர் எடுத்துரைத்தார். “சுமார் 18 நாட்கள் அவை விண்வெளியில் இருந்தன. அந்த சூழலை எதிர்கொள்ள அவை இனப்பெருக்க வேலைகளில் ஈடுபட்டாலும், அவை எதுவும் கருத்தரிக்கவில்லை” என்று கூறிய அவர், “பூஜ்ஜிய புவியீர்ப்பு நிலையில் இனப்பெருக்க உறுப்புகள் பாதிப்பு அடையும் என்று கருதப்படுகிறது. அதை நோக்கி இந்த ஆராய்ச்சி நடத்தப்படும்” எனக் கூறினார்.

உலகின் பல நாடுகள், நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்தில், நீண்ட கால அடிப்படையில் குடியேற திட்டமிட்டுள்ளனர். எனவே, இதுபோன்ற சோதனைகள் அவசியம் ஆகின்றன. குரங்குகள், மனிதர்களை போன்று இயல்புகள் மற்றும் செயல்பாடுகளை கொண்டுள்ளதால், இந்த ஆராய்ச்சி, பிற கிரகங்களில் மனித குடியேற்றத்திற்கான துவக்க புள்ளி என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu