ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு சீன தூதர்கள் அனுப்பி வைப்பு

உக்ரைன் ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர, சீனா, முயற்சி எடுக்க முன்வந்துள்ளது. அந்த வகையில், உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு, வரும் திங்கள்கிழமை தூதர்களை அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளது. மேலும், ஐரோப்பிய விவகாரங்களுக்கான சீன அரசின் தூதர் லீ ஹூய், போலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் வாங் வென்பின், இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சீன அதிபர் ஜி ஜின்பிங், […]

உக்ரைன் ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர, சீனா, முயற்சி எடுக்க முன்வந்துள்ளது. அந்த வகையில், உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு, வரும் திங்கள்கிழமை தூதர்களை அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளது. மேலும், ஐரோப்பிய விவகாரங்களுக்கான சீன அரசின் தூதர் லீ ஹூய், போலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் வாங் வென்பின், இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சீன அதிபர் ஜி ஜின்பிங், தனது ரஷ்ய பயணத்தின் போது, சீன தூதரை அனுப்புவதாக அறிவித்திருந்தார். மேலும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸகி உடனான தொலைபேசி உரையாடலிலும் இது குறித்து கூறியிருந்தார். அதன்படி, தற்போது தூதர்கள் அனுப்பப்பட உள்ளனர். சீனாவின் இந்த முடிவு போர் நிறுத்தம் நோக்கிய மிக முக்கியமான நகர்வு என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu