6 நாடுகள் விசா இல்லாமல் பயணிக்க சீனா அனுமதி

November 25, 2023

சீனா மலேசியா மற்றும் ஐந்து ஐரோப்பிய நாடுகளுக்கு விசா இல்லாமல் நாட்டிற்குள் நுழையும் அனுமதியை அளித்துள்ளது. வரும் டிசம்பர் 1 முதல் ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், பிரான்ஸ், மலேசியா ஆகிய நாட்டு மக்கள் விசா இல்லாமல் சீனாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவர் என்று கூறப்பட்டுள்ளது. அதோடு 15 நாட்கள் தங்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இது ஒரு சோதனை முயற்சியாகும். இது ஒரு வருடத்திற்கு செயல்படுத்தப்பட உள்ளது. இந்த முயற்சியின் நோக்கம் சீனா மற்றும் வெளிநாட்டு பணியாளர்கள் பரிமாற்றத்தில் […]

சீனா மலேசியா மற்றும் ஐந்து ஐரோப்பிய நாடுகளுக்கு விசா இல்லாமல் நாட்டிற்குள் நுழையும் அனுமதியை அளித்துள்ளது.
வரும் டிசம்பர் 1 முதல் ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், பிரான்ஸ், மலேசியா ஆகிய நாட்டு மக்கள் விசா இல்லாமல் சீனாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவர் என்று கூறப்பட்டுள்ளது. அதோடு 15 நாட்கள் தங்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இது ஒரு சோதனை முயற்சியாகும். இது ஒரு வருடத்திற்கு செயல்படுத்தப்பட உள்ளது. இந்த முயற்சியின் நோக்கம் சீனா மற்றும் வெளிநாட்டு பணியாளர்கள் பரிமாற்றத்தில் வளர்ச்சி ஏற்படுத்துவதே ஆகும் என்று அந்நாட்டு வெளியுறவு துறையின் செய்தி தொடர்பாளர் மௌனிங் கூறியுள்ளார்.
இதற்கு முன் ஜப்பான் சிங்கப்பூர், புரூணை ஆகிய நாடுகளுக்கு விசா இல்லாமல் வர சீனா அனுமதி அளித்திருந்தது. கொரோனா தொற்றினால் அந்த சலுகையை நிறுத்தி வைத்திருந்தது. பின்பு தொற்றுக்கு பின்னர் புரூணை, சிங்கப்பூருக்கு மட்டும் மீண்டும் அனுமதி அளித்திருந்தது. சீனா தன்னுடைய பொருளாதாரத்தை உயர்த்த வெளிநாட்டு முதலீட்டாளர்களை வரவேற்று வருகிறது குறிப்பிடத்தக்கது..

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu