சீன அதிபர் ஜிங்பிங் மூன்று நாள் பயணமாக நேற்று ஐரோப்பா சென்றார்.
ஐரோப்பிய நாடுகளில் சீன உளவாளிகள் அதிக அளவில் ஊடுருவி உள்ளதாக அந்நாட்டு தூதர்கள் சீனா குறித்து தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். சீனாவில் மானியங்களுடன் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்கள் காரணமாக ஐரோப்பாவில் உள்ள வாகன தயாரிப்பாளர்கள் மின்னணு சந்தையில் பின்தங்கி உள்ளனர். மேலும் ரஷ்யாவுக்கு சீனா ஆயுத விற்பனை செய்வதால் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் சீனா மீது அதிருப்தியாக உள்ளது. தற்போது ஐரோப்பா சீனா இடையே நாள் ஒன்றுக்கு 203 கோடி யூரோ மதிப்பில் வணிகம் நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்றுக்குப் பிறகு வணிக உறவில் ஏற்பட்ட தொய்வை சீர்படுத்த சீன அதிபர் பயணம் மேற்கொண்டுள்ளார். ஐரோப்பிய சுற்று பயணத்தில் முதலாவதாக பிரான்ஸுக்கு நேற்று சென்றார். அதன் பிறகு செர்பியா மற்றும் ஹங்கேரி நாடுகளுக்கு செல்ல உள்ளார். இந்த இரு நாடுகளில் சீனா அதிக அளவில் முதலீடு செய்துள்ளது. சீனாவில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு அந்நாடு மானியம் வழங்குவது குறித்து ஐரோப்பிய ஆணையம் விசாரணை செய்கிறது.