கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் சீனாவின் பொருளாதாரம் அதிக வளர்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக, பிரபல மதிப்பீட்டு நிறுவனங்களின் கணிப்புகளை பொய்யாக்கி கூடுதல் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
உலகின் 2வது பெரிய பொருளாதாரமாக சீனா விளங்குகிறது. இந்த நிலையில், கொரோனா பரவலுக்கு பிறகு சீனாவின் பொருளாதாரம் நலிவடைந்து வந்தது. தற்போது அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகளின் விளைவாக அந்நாட்டின் பொருளாதார மீண்டெழுந்துள்ளது. கடந்த காலாண்டில், சீனாவின் பொருளாதார வளர்ச்சி 4.8% அளவில் இருக்கும் என கணிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையில் சீனாவின் பொருளாதாரம் 5.3% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது 1.6% உயர்வாகும். மேலும், நடப்பாண்டிற்கு சீனாவின் ஜிடிபி வளர்ச்சி இலக்கு 5% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை சீனா எட்டுவதற்கு அதிக சாத்தியக்கூறுகள் உள்ளதாக கோல்ட்மேன் சாக்ஸ் தெரிவித்துள்ளது.