சீனாவின் பொருளாதார வளர்ச்சி - இலக்கை விட குறைவாகப் பதிவு

October 18, 2024

சீனாவின் பொருளாதாரம் எதிர்பார்த்த அளவுக்கு வளர்ச்சியடையவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. 2024-ஆம் ஆண்டின் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் சீனாவின் பொருளாதாரம் 4.6% மட்டுமே வளர்ந்துள்ளது. இது அரசாங்கம் நிர்ணயித்த 5% என்ற இலக்கை விட குறைவு. மேலும், கடந்த காலாண்டில் 4.7% வளர்ச்சி பதிவானது நினைவு கூறத்தக்கது. சீன மக்கள் பொருட்களை வாங்குவதில் குறைந்த ஆர்வம் காட்டுவது மந்தமான வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. குறிப்பாக, ரியல் எஸ்டேட் துறையில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. புதிய வீடுகள் விற்பனை […]

சீனாவின் பொருளாதாரம் எதிர்பார்த்த அளவுக்கு வளர்ச்சியடையவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. 2024-ஆம் ஆண்டின் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் சீனாவின் பொருளாதாரம் 4.6% மட்டுமே வளர்ந்துள்ளது. இது அரசாங்கம் நிர்ணயித்த 5% என்ற இலக்கை விட குறைவு. மேலும், கடந்த காலாண்டில் 4.7% வளர்ச்சி பதிவானது நினைவு கூறத்தக்கது.

சீன மக்கள் பொருட்களை வாங்குவதில் குறைந்த ஆர்வம் காட்டுவது மந்தமான வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. குறிப்பாக, ரியல் எஸ்டேட் துறையில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. புதிய வீடுகள் விற்பனை 22.7% வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த பிரச்சினையை சரிசெய்ய, வீட்டுக்கடன் வட்டி விகிதத்தை குறைத்தல், வங்கிகளுக்கு கடன் வழங்கும் வசதியை அதிகரித்தல் போன்ற பல நடவடிக்கைகளை சீன அரசாங்கம் எடுத்து வருகிறது. இருப்பினும், இவை போதுமானதாக இல்லை என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu