டியாங்காங் விண்வெளி நிலையத்தை சென்றடைந்த ஷின்சோ 18 வீரர்கள்

சீனாவின் தனிப்பட்ட விண்வெளி நிலையமான டியாங்காங் விண்வெளி நிலையத்துக்கு புதிய குழு வீரர்களை சீனா அனுப்பி உள்ளது. ஷின்சோ 18 விண்கலம் மூலம் 3 விண்வெளி வீரர்கள் டியாங்காங் விண்வெளி நிலையத்தை சென்றடைந்துள்ளனர். இதன் மூலம், சீனா 7 வது முறையாக மனிதர்களை விண்வெளி நிலையத்துக்கு சுமந்து சென்றுள்ளது. கோபி பாலைவனப் பகுதியில் இருந்து செலுத்தப்பட்ட ஷின்சோ 18 விண்கலம் டியாங்காங் விண்வெளி நிலையத்தை வெற்றிகரமாக அடைந்தது. கமாண்டர் யே குவான்பு, ரோகீஸ் லி காங் மற்றும் […]

சீனாவின் தனிப்பட்ட விண்வெளி நிலையமான டியாங்காங் விண்வெளி நிலையத்துக்கு புதிய குழு வீரர்களை சீனா அனுப்பி உள்ளது. ஷின்சோ 18 விண்கலம் மூலம் 3 விண்வெளி வீரர்கள் டியாங்காங் விண்வெளி நிலையத்தை சென்றடைந்துள்ளனர். இதன் மூலம், சீனா 7 வது முறையாக மனிதர்களை விண்வெளி நிலையத்துக்கு சுமந்து சென்றுள்ளது.

கோபி பாலைவனப் பகுதியில் இருந்து செலுத்தப்பட்ட ஷின்சோ 18 விண்கலம் டியாங்காங் விண்வெளி நிலையத்தை வெற்றிகரமாக அடைந்தது. கமாண்டர் யே குவான்பு, ரோகீஸ் லி காங் மற்றும் லி குவான்சு ஆகியோரை ஷின்சோ 17 வீரர்கள் வரவேற்றனர். கடந்த அக்டோபர் 2023 முதல் டியாங்காங் விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் ஷின்சோ 17 வீரர்கள் 3 பேர், வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி பூமிக்கு திரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஷின்சோ 18 வீரர்கள் அடுத்த 6 மாத காலத்துக்கு விண்வெளி நிலையத்தில் தங்கி இருந்து பல்வேறு அறிவியல் பரிசோதனைகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu