சர்வதேச எதிர்ப்புகளை மீறி, கடந்த அக்டோபர் 23ஆம் தேதி, சீனா ஆராய்ச்சி கப்பல் சியான் 6, இலங்கை வந்தடைந்தது. தற்போது, இந்த கப்பல் இலங்கையின் கடல் வளங்களை ஆராயும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
இன்று தொடங்கி 2 நாட்கள் இலங்கை கடற்கரையில் இந்த கப்பல் ஆய்வு பணிகளை மேற்கொள்ள உள்ளது. இலங்கை அதிகாரிகள் இந்த தகவலை உறுதி செய்துள்ளனர். இலங்கையின் தேசிய நீர்வள ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் மற்றும் ருகுணு பல்கலைக்கழகம் ஆகியவை சீனாவுடன் இணைந்து இந்த ஆராய்ச்சியில் ஈடுபடுகின்றன. சீன கப்பல்கள் இலங்கைக்கு வருவது குறித்து இந்தியா பலமுறை எச்சரித்துள்ளது. ஆனால், தொடர்ந்து சீன கப்பல்கள் இலங்கைக்கு வருகின்றன. இது தொடர்பாக அமெரிக்காவும் வருத்தம் தெரிவித்திருந்தது. எனவே, இது, சர்வதேச அளவில் இலங்கையுடனான உறவில் விரிசலை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.














