சீனா அனுப்பிய செவ்வாய் கிரக ரோவரில் 5 மாதங்களாக அசைவு இல்லை - நாசா

February 24, 2023

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக, ஜுராங் என்ற ரோவரை சீனா அனுப்பியிருந்தது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், தியான்வென் 1 திட்டத்தின் கீழ் இந்த ரோவர் அனுப்பப்பட்டது. இந்நிலையில், இந்த ரோவர், கடந்த 5 மாதங்களாக அசைவுகள் இன்றி இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. செவ்வாய் கிரகத்தை சுற்றி வரும் நாசாவின் ஆர்பிட்டர், இது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்துள்ளது. அதன்படி, கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி மற்றும் 2023 ஆம் ஆண்டு […]

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக, ஜுராங் என்ற ரோவரை சீனா அனுப்பியிருந்தது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், தியான்வென் 1 திட்டத்தின் கீழ் இந்த ரோவர் அனுப்பப்பட்டது. இந்நிலையில், இந்த ரோவர், கடந்த 5 மாதங்களாக அசைவுகள் இன்றி இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.

செவ்வாய் கிரகத்தை சுற்றி வரும் நாசாவின் ஆர்பிட்டர், இது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்துள்ளது. அதன்படி, கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி மற்றும் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி ஆகியவற்றில் எடுத்த புகைப்படங்களில், ரோவரின் இருப்பிடம் மாறாமல் உள்ளது. எனவே, சீனாவின் ரோவர் செயலிழந்து இருக்கலாம் என்று நாசா தெரிவித்துள்ளது. எனினும், இது தொடர்பான தகவல்கள் எதுவும் சீனா தரப்பில் இருந்து வெளியாகவில்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu