சீனாவின் விண்வெளித் துறை சார்ந்த வர்த்தக நிறுவனமான ஐஸ்பேஸ், ஹைபர்போலா 1 ராக்கெட் பரிசோதனையை மேற்கொண்டது. ஆனால் இந்த பரிசோதனை தோல்வியில் முடிந்ததால், நிறுவனத்திற்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
நான்கு நிலைகளைக் கொண்ட ஹைபர்போலா 1 ராக்கெட் கோபி பாலைவனத்தில் உள்ள Jiuquan spaceport இல் இருந்து நேற்று ஏவப்பட்டது. அப்போது ராக்கெட்டின் நான்காம் நிலை செயல்பாடு தோல்வியில் முடிந்தது. திட்டத்தின் தோல்விக்கான காரணம் குறித்து விரைவில் அறிக்கை வெளியிடுவதாக ஐஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவில் தொடர்ந்து விண்வெளி துறை சார்ந்த வர்த்தக நிறுவனங்களின் ராக்கெட் பரிசோதனைகள் தோல்வியில் முடிந்து வருவது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.