சீனாவின் கொரோனா தடுப்பூசி திறனற்றது என நிரூபிக்கப்பட்டு, உலக நாடுகளுக்கு சிக்கல் ஏற்படுத்தி உள்ளது என அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.
சீனா சினோவேக் என்ற பெயரிலான கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபட்டது. அவற்றால், கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பை அளிக்க முடியவில்லை. சீனாவின் தடுப்பூசியான சின்கோவேக் போதிய பயனளிக்கவில்லை என்ற தகவலும் வந்துள்ளது.
இது பற்றி தி சிங்கப்பூர் போஸ்ட் என்ற பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, தொடர்ச்சியாக சீனாவில் பரவி வரும் கொரோனா பாதிப்புகள் மூலம் அந்நாட்டின் தடுப்பூசிகளின் திறன் பற்றாக்குறை நிரூபிக்கப்பட்டது. இது உலக மக்களுக்கும் பெரிய சிக்கலை உருவாக்கி உள்ளது என தெரிவித்து உள்ளது. சீனாவின் சினோவேக் போன்ற தடுப்பூசிகள் மரணத்திற்கு எதிராக 61 சதவீதம் திறன் பெற்றிருந்தது. ஆனால், மாடர்னா மற்றும் பைசர் தடுப்பூசிகள் இவை இரண்டிலும் 90 சதவீத திறனுடன் உள்ளன என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.
இந்தோனேசியா மற்றும் பிரேசில் நாடுகளும், சீனா வழங்கிய தடுப்பூசிகள் திறனுடன் உள்ளன என முதலில் கூறி, பின்னர் அதில் இருந்து பின்வாங்கியது. இதுபோன்று சர்வதேச அளவில் சீன தடுப்பூசிகளின் நிலை வெளியுலகிற்கு தெரிய வந்தபோதிலும், உள்நாட்டிலேயே அதன் பயன்பாடு மக்களால் எதிர்க்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.