பல நாடுகளுடன் இணைந்து நடத்திய இந்திய கடற்படை போர் பயிற்சியில் சீன விமானங்கள் ஊடுருவ முயற்சி செய்துள்ளது.
முதல் ஆசியான்-இந்தியா கடற்படை போர் பயிற்சி தென் சீனக்கடலில் கடந்த 2 நாட்களாக நடந்து முடிந்தது. இந்தியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, புனே, வியட்நாம் ஆகிய நாடுகள் இணைந்து ஆசியான்-இந்தியா கடல்சார் பயிற்சியை நடத்தின. இதில் அந்நாடுகளின் போர் கப்பல்கள் பங்கேற்றன. இந்நிலையில் தென்சீன கடல் பகுதியில் ஆசியான்-இந்திய கடற்படை பயிற்சியில் சீன கப்பல்கள் மற்றும் விமானங்கள் ஊடுருவ முயற்சி செய்துள்ளன. வியட்நாமின் பிரத்யேக பொருளாதார மண்டல பகுதியை சீன கப்பல்கள் நெருங்கி வந்தன. ஆனால் ஆசியான்-இந்திய கடற்படை பயிற்சிகளை தடுக்கவில்லை. ஆசியான்-இந்தியா போர் பயிற்சியை சீன கண்காணிக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.