சீன பிரதமர் ஜி ஜின்பிங் தனது பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு செர்பியா வருகை தந்துள்ளார்.
தனது மனைவியுடன் சீன அதிபர் ஜி ஜின்பிங் செர்பியா வந்துள்ளார். அவரது வருகையை முன்னிட்டு செர்பிய விமானப்படை சார்பில் 2 போர் விமானங்கள் அவரது பாதுகாப்புக்காக விமானத்தை தொடர்ந்து வந்தன. செர்பியாவின் அதிபர் அலெக்சாண்டர் ஊகிக் மற்றும் அவரது மனைவி தமாரா ஊகிக் ஆகியோர் ஜி ஜின்பிங் மற்றும் அவர் மனைவியை வரவேற்றனர். அதன் பிறகு, ஜி ஜின்பிங் செய்தி அறிக்கை வெளியிட்டார். அதில், “செர்பியாவுக்கு வருகை தந்ததில் மகிழ்ச்சி. கடந்த 2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு, செர்பியா மற்றும் சீனா இடையிலான உறவு பன்மடங்கு வலுவடைந்துள்ளது. அந்த வகையில், இந்த பயணத்தின் மூலம் அடுத்த அத்தியாயம் தொடங்கப்படுகிறது. நீண்ட நாட்களாக நட்பு நாடுகளாக இருந்து வரும் செர்பியா மற்றும் சீனா இடையே புதிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.