சீனாவின் சாங்கை ஆறு விண்கலம் வருகிற 25 ஆம் தேதி பூமிக்கு திரும்புகிறது என்று கூறப்பட்டுள்ளது.
சீனா சாங்கே -6 என்ற செயற்கைக்கோளை நிலவின் தென் துருவத்திற்கு அனுப்பியது. இந்த செயற்கைக்கோள் கொண்டு சென்ற விண்கலம் கடந்த இரண்டாம் தேதி நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்த விண்கலம் நிலவில் உள்ள பாறைகள் மற்றும் பிற மாதிரிகளை சேகரித்து பூமிக்கு எடுத்து வருவதற்காக அனுப்பப்பட்டது. இதற்காக அந்த விண்கலம் கடந்த இரு நாட்கள் ஆய்வு பணிகளை மேற்கொண்டது.
இந்நிலையில், சாங்கே - 6 விண்கலம் மாதிரிகளை சேகரித்துள்ளதாக கூறப்படுகிறது. அது நிலவின் மேற்பரப்பில் இருந்து புறப்பட்டு அதன் சுற்றுப் பாதையில் நுழைந்துள்ளது. வருகிற 25-ம் தேதி பூமிக்கு அது திரும்பும் என்று கூறப்படுகிறது.