சீனாவை சேர்ந்த விண்வெளி துறை சார்ந்த வர்த்தக நிறுவனம் ஒன்று ராக்கெட் என்ஜின் பரிசோதனையில் ஈடுபட்டது. இந்த பரிசோதனை தோல்வியில் முடிந்ததுடன் மிகப்பெரிய வெடி விபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
சீனாவை சேர்ந்த ஸ்பேஸ் பயோனியர் (Space Pioneer) என்ற நிறுவனம், கடந்த ஜூன் 30-ம் தேதி ராக்கெட் என்ஜின் எரியூட்டும் பரிசோதனையை மேற்கொண்டது. ஹெனான் மாகாணத்தில் உள்ள கொங்யி பகுதியில் Tianlong-3 ராக்கெட்டுக்கான ஃபயர் டெஸ்ட் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, ராக்கெட் கிளம்பிய 50 வினாடிகளில் அதன் எரியூட்டும் பகுதி பூமியில் விழுந்தது. அதில் கணிசமான அளவு எரிபொருள் இருந்ததால், மிகப்பெரிய வெடி விபத்து ஏற்பட்டது. இது தொடர்பான காணொலி இணையத்தில் வெளியாகி, அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. Tianlong-3 ராக்கெட், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட்டுக்கு எதிராக தயாரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.