பச்சை நிற கண்கள் மற்றும் ஒளிரும் நகக் கண்கள் கொண்ட புதிய குரங்கு இனத்தை சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
சீனாவில், சீமேரா (Chimera) என்ற குரங்கு இனம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்ட இந்த குரங்கு இனம், 2 ஜோடி டிஎன்ஏக்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. நீளமான வால் கொண்ட மக்கா என்ற ஒரே குரங்கு இனத்தைச் சேர்ந்த 2 வெவ்வேறு கருமுட்டைகளின் ஸ்டெம் செல் கொண்டு இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய குரங்கு, 10 நாட்கள் வரை உயிரோடு இருந்ததாக கூறப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி தொடர்பான விரிவான தகவல்கள் ‘செல்’ என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், இந்த ஆராய்ச்சி மூலம், ஸ்டெம் செல் ஆராய்ச்சிகளில் அடுத்த நிலை எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.














