நிலவின் மறுபக்கத்துக்கு சீனா அனுப்பிய சாங்கே 6 விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது. அதன்படி, நிலவின் மறுபக்கத்தில் கால்பதித்த முதல் நாடாக சீனா வரலாறு படைத்துள்ளது.
கடந்த மே 3ம் தேதி, சாங்கே 6 விண்கலம் நிலவின் மறுபக்கத்தில் இருந்து மாதிரிகளை சேகரித்து வருவதற்காக அனுப்பப்பட்டது. நிலவை நோக்கி பயணித்து வந்த இந்த விண்கலம், திட்டமிடப்பட்ட இடத்தில், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது. சீனாவின் உள்ளூர் நேரப்படி, நேற்று காலை 6:23 மணிக்கு விண்கலம் நிலவின் மறுபக்கத்தில் தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமியின் பார்வையில் இருந்து மறைந்து இருக்கும் நிலவின் இருள் நிறைந்த மறுபக்கத்தில், விண்கலம் தரை இறங்கி உள்ளது. விண்கலத்தில் உள்ள அசெண்டர், அங்கிருக்கும் கல் மற்றும் மண் மாதிரிகளை சேகரித்து, ஆர்பிட்டரில் கொண்டு சேர்க்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதன் பிறகு, ரிட்டர்னர் கலர் மூலம் மாதிரிகள் பூமிக்கு கொண்டுவரப்படும் என கூறியுள்ளனர்.