சீன விண்கலம் டியான்சூ-6 சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது

சீன விண்கலம் டியான்சூ-6 வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. சீனா விண்வெளியில் டியாங்யாங் விண்வெளி நிலையத்தை அமைத்துள்ளது. ஒரே நேரத்தில் 6 பேர் வரை தங்கும் வகையில் இந்த விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் ஆயுட்காலம் 2038-ல் முடிவடைவதாக சீனா கணித்துள்ளது. இங்கு முதன்முறையாக கடந்த டிசம்பர் மாதம் சீன விண்வெளி குழுவினர் சென்றனர். இந்நிலையில் தற்போது சீனாவின் தெற்கு தீவு மாகாணமான ஹைனானில் உள்ள வெங்சாங் ஏவுதளத்தில் இருந்து டியான்சூ-6 என்ற விண்கலத்தை சீனா அனுப்பியது. அது […]

சீன விண்கலம் டியான்சூ-6 வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

சீனா விண்வெளியில் டியாங்யாங் விண்வெளி நிலையத்தை அமைத்துள்ளது. ஒரே நேரத்தில் 6 பேர் வரை தங்கும் வகையில் இந்த விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் ஆயுட்காலம் 2038-ல் முடிவடைவதாக சீனா கணித்துள்ளது. இங்கு முதன்முறையாக கடந்த டிசம்பர் மாதம் சீன விண்வெளி குழுவினர் சென்றனர்.

இந்நிலையில் தற்போது சீனாவின் தெற்கு தீவு மாகாணமான ஹைனானில் உள்ள வெங்சாங் ஏவுதளத்தில் இருந்து டியான்சூ-6 என்ற விண்கலத்தை சீனா அனுப்பியது. அது வெற்றிகரமாக விண்ணில் சரியான சுற்றுப்பாதையில் நிறுத்தப்பட்டுள்ளது. வருங்காலங்களில் 16 மனிதர்களையும் அங்கு கொண்டு செல்லும் என சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu