சீன உளவு கப்பல் நாளை இலங்கைக்கு வர உள்ளது
இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் சீனா இலங்கைக்கு அதிக கடன் வழங்கியுள்ள நாடாக தற்போது நிகழ்ந்து வருகிறது. அதேபோல் இலங்கைக்கு இந்தியா 3.5 பில்லியன் டாலர்களை கடனாக வழங்கியுள்ளது. மேலும் எரிபொருள், மருந்துகள்,அரிசி மற்றும் உணவுப் பொருட்களையும் கொடுத்து உதவியுள்ளது. இந்நிலையில் சீனாவின் உளவு கப்பல் நாளை இலங்கையை வந்தடைகிறது. இந்த கப்பலின் மூலம் சுமார் 750 கிலோமீட்டர் தூரம் வரையிலான இடங்களை கண்காணிக்க முடியும். அதன்படி ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவதளம், கல்பாக்கம் அணுமின் நிலையம், கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் இந்தியாவின் தென் மாநிலங்களில் அமைந்திருக்கும் ஆறு கடற்படை தளங்களை இந்த கப்பல் உளவு பார்க்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இதனால் இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் இலங்கை இதற்கு அனுமதி அளித்துள்ளது. மேலும் இந்த கப்பல் அனுமதியை இலங்கை வழங்கினால் பதட்டமான நிலைகள் உருவாகும் என ஆய்வாளர்கள் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். தேசிய நீரியல் வள ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனத்தின் ஒப்பந்தப்படி நீர் மாதிரிகளை எடுப்பதற்காக பணியில் ஈடுபடுவதற்கு வருகிறது என நாரா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் இந்தியர்களில் 24 சீன கப்பல்கள் நுழைய திட்டமிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது














