சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நேற்று காலை விமரிசையாக நடைபெற்றது.
மதுரையில் சித்திரை திருவிழா கொடி ஏற்றத்துடன் கோலாகமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 21ஆம் தேதி அழகர் கோவிலில் இருந்து கள்ளழகர் வேடம் பூண்டு பெருமாள் தங்க பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார். பின்னர் மூன்றுமாவடிக்கு வந்து எதிர்சேவை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர் நேற்று காலை 3 மணிக்கு வைகை ஆற்றிற்கு ஆண்டாள் சூடி கொடுத்த மாலையை அணிந்து வந்து பின்னர் அதிகாலை 6.02 மணி அளவில் ஆற்றில் கள்ளழகர் இறங்கினார். அதனை தொடர்ந்து இரவு ஒன்பது மணிக்கு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலில் கள்ளழகர் காட்சி அளித்தார். பின்னர் நேற்று மண்டக முனிவருக்கு கள்ளழகர் சாப விமோசனம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் கள்ளழகர் ராமராயர் மண்டகப்படிக்கு வருகிறார். அங்கு இரவு 11 மணி முதல் காலை வரை விடிய விடிய தசாவதார நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதியில் மோகினி அவதார கோலத்தில் கள்ளழகர் வீதியுலா வந்தார். அதன்படி இன்று இரவு 11 மணிக்கு தல்லாகுளத்தில் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனமாகி 26 ஆம் தேதி காலை 2:30 மணிக்கு பூ பல்லக்கில் கள்ளழகர் எழுந்தருளுகிறார். அதே கோலத்தில் கருப்பணசாமி கோவில் சன்னதியில் இருந்து அழகர் மலைக்கு புறப்பட்டு செல்கிறார்.














