அங்கோலாவில் காலரா தொற்றினால் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆப்பிரிக்காவில் உள்ள அங்கோலாவில் காலரா தொற்று பரவி வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை இந்த தொற்று முதன்முறையாக பதிவாகி, அதன் பின்னர் 170 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கொண்ட பரிசோதனைகளில் 14 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 12 லட்சம் மக்கள் வசிக்கும் லுவாண்டா மாகாணத்தில் ககுவாகோ புறநகரில் காலரா பரவி வருகிறது. இதுவரை இந்த தொற்றினால் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விவரத்தை அங்கோலாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளார்.