நியூசிலாந்து புதிய பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் இன்று பதவியேற்று கொண்டார்.
சுதந்திரா தொழிலாளர் கட்சியை சேர்ந்த ஆர்டென் திடீரென அவர் பதவி விலகல் அறிவிப்பை வெளியிட்டது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து, அக்கட்சியை சேர்ந்த கிறிஸ் ஹிப்கின்ஸ் புதிய பிரதமராக பொறுப்பேற்பார் என தகவல்கள் வெளிவந்தன. இதன்படி, இன்று காலை அவர் பதவியேற்கும் நிகழ்ச்சி நடந்தது. இதனை முன்னிட்டு, பிரதமராக பதவி வகித்து வந்த ஆர்டென், அரசு இல்லத்தில் முறைப்படி தனது ஆட்சி, அதிகாரம் உள்ளிட்டவற்றை ஒப்படைத்து, பதவி விலகல் கடிதமும் அளித்து உள்ளார். இதன்பின், புதிய பிரதமராக பொறுப்பேற்க உள்ள ஹிப்கின்ஸ் மற்றும் துணை பிரதமர் கார்மெல் செபுலோனி ஆகியோர் அரசு இல்லத்திற்கு வருகை தந்தனர். கிறிஸ் ஹிப்கின்ஸ் முறைப்படி 41-வது பிரதமராக இன்று காலை பதவியேற்று கொண்டார்.
கடந்த 2008-ம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கு முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹிப்கின்ஸ், 2020-ம் ஆண்டு நவம்பரில் கொரோனா தடுப்புக்கான மந்திரியாக நியமனம் செய்யப்பட்டார். அவர் காவல், கல்வி மற்றும் பொது சேவை ஆகிய துறைகளின் மந்திரியாகவும் பதவி வகித்தார்.














