டிசம்பர் 24 அன்று, ‘கிறிஸ்துமஸ் ஈவ் சிறுகோள்’ என்று அழைக்கப்படும் சிறுகோள் 2024 XN1 பூமியை நெருங்க உள்ளது. நாசா மற்றும் ஈஎஸ்ஏ ஆகிய விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் இணைந்து இந்த சிறுகோளை கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி கண்டுபிடித்துள்ளன.
கிறிஸ்துமஸ் ஈவ் சிறுகோள் மணிக்கு 14,743 மைல் வேகத்தில் பூமியை கடந்து செல்லும். இது பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரத்தை விட 18 மடங்கு அதிகமான தூரத்தில் பூமியை நெருங்கும். 95 முதல் 230 அடி வரை அளவுள்ள இந்த சிறுகோள், 12 மில்லியன் டன் TNT சக்தியைக் கொண்டுள்ளது என்றாலும், பூமிக்கு எந்தவித ஆபத்தையும் ஏற்படுத்தாது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.














