கிறிஸ்துமஸ், புத்தாண்டு தினம் -  ஓசூரில் இருந்து வெளிநாடுகளுக்கு 7 லட்சம் ரோஜா ஏற்றுமதி

December 26, 2022

கிறிஸ்துமஸ், புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஓசூரில் இருந்து வெளிநாடுகளுக்கு 7 லட்சம் ரோஜா ஏற்றுமதி செய்ப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை, பேரிகை, சூளகிரி உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் குளிர்ந்த நிலை காரணமாக 475 ஹெக்டேர் பரப்பளவில் பசுமைக் குடில் அமைத்து விவசாயிகள் ரோஜா மலர் சாகுபடி செய்து வருகின்றனர்.பெங்களூரு வர்த்தக மையம் மூலமாக சிங்கப்பூர், மலேசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்புவரை 30 முதல் 40 லட்சம் மலர்களும், […]

கிறிஸ்துமஸ், புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஓசூரில் இருந்து வெளிநாடுகளுக்கு 7 லட்சம் ரோஜா ஏற்றுமதி செய்ப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை, பேரிகை, சூளகிரி உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் குளிர்ந்த நிலை காரணமாக 475 ஹெக்டேர் பரப்பளவில் பசுமைக் குடில் அமைத்து விவசாயிகள் ரோஜா மலர் சாகுபடி செய்து வருகின்றனர்.பெங்களூரு வர்த்தக மையம் மூலமாக சிங்கப்பூர், மலேசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்புவரை 30 முதல் 40 லட்சம் மலர்களும், காதலர் தினத்துக்கு ரூ.1 கோடி மலர்களும் ஏற்றுமதியானது.

கடந்த 2015-ம் ஆண்டு முதல் உற்பத்தி பாதிப்பு, மழையின்மை, வறட்சி, பணமதிப்பிழப்பு, கரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வெளிநாடுகளுக்கு ரோஜா மலர் ஏற்றுமதி படிப்படியாக சரிந்து வருகிறது. ஓசூர் பகுதிகளில் வழக்கமாக கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காலங்களில் 15 லட்சம் மலர்கள் ஏற்றுமதியாகும். நிகழாண்டில் 5 முதல் 7 லட்சம் ரோஜாமலர் ஏற்றுமதியாகி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu