துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தை நோக்கி சென்ற ஒரு காரில் இருந்து நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதில் தேவாலயத்தின் சங்க கட்டிடத்தின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. இந்த சம்பவம் காரணமாக அங்கு இருந்தவர்கள் அலறி ஓடினர். சம்பவத்திற்கு பிறகு, அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது. அதிர்ஷ்டவசமாக, உயிரிழப்புகள் அல்லது தீவிரப் பாதிப்புகள் ஏற்பட்டவில்லை. இந்த தாக்குதல் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, 3 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.













