புதிய கடன் விண்ணப்பதாரர்களுக்கு சலுகை – வங்கிகள் வேறு தரவுகள் மூலம் மதிப்பீடு செய்ய வேண்டும்.
வங்கிகளில் இருந்து தனிநபர் கடன், நகைக்கடன், வீடு உள்ளிட்ட கடன்களை பெறுவதற்கு பொதுவாக ‘சிபில் ஸ்கோர்’ முக்கியமாக கருதப்படுகிறது. ஆனால் முதல் முறை கடன் பெறுவோருக்கு சிபில் ஸ்கோர் இல்லாததால் கடன் மறுக்கப்படும் நிலை ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில், முதல் முறை வங்கிக்கடன் பெற சிபில் ஸ்கோர் கட்டாயம் இல்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி தெரிவித்ததாவது: வங்கிகள் சிபில் ஸ்கோர் அடிப்படையில் மட்டும் கடன் மறுக்கக்கூடாது. விண்ணப்பதாரர்களின் நம்பகத்தன்மை, கடன் திருப்பிச் செலுத்தும் திறன் போன்றவற்றை ஆய்வு செய்து முடிவெடுக்க வேண்டும் என்றார். இதன்மூலம் புதிய விண்ணப்பதாரர்களுக்கு கடன் பெறும் வாய்ப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.