நிலக்கரி எரிவாயு திட்டத்திற்காக பெல், கெயில், ஐஓசிஎல் உடன் இணையும் சிஐஎல்

September 24, 2022

நிலக்கரியை எரிவாயுவாக மாற்றும் திட்டத்திற்காக, கோல் இந்தியா லிமிடெட் (CIL) நிறுவனம், பொதுத்துறை நிறுவனங்களான பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்(IOCL) மற்றும் கேஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா லிமிடெட் (GAIL) ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்ற உள்ளது. நிலக்கரியை சின்கேஸ் (SynGas) எனப்படும் எரிவாயுவாக மாற்றம் செய்யும் நான்கு நிலையங்களை அமைக்க, சிஐஎல் நிறுவனம், 3 புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளதாக நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதியை கட்டுப்படுத்த […]

நிலக்கரியை எரிவாயுவாக மாற்றும் திட்டத்திற்காக, கோல் இந்தியா லிமிடெட் (CIL) நிறுவனம், பொதுத்துறை நிறுவனங்களான பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்(IOCL) மற்றும் கேஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா லிமிடெட் (GAIL) ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்ற உள்ளது. நிலக்கரியை சின்கேஸ் (SynGas) எனப்படும் எரிவாயுவாக மாற்றம் செய்யும் நான்கு நிலையங்களை அமைக்க, சிஐஎல் நிறுவனம், 3 புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளதாக நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கச்சா எண்ணெய் இறக்குமதியை கட்டுப்படுத்த இந்திய அரசு நிலக்கரி மூலம் எரிவாயு உற்பத்தியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. அடுத்த 8 ஆண்டுகளில், 100 மில்லியன் டன் நிலக்கரி எரிவாயுவை உற்பத்தி செய்ய இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்தத் திட்டங்களின் மூலம், 23000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன், அந்நியச் செலாவணி இருப்பு பாதுகாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்களுக்காக சுமார் 4 லட்சம் கோடி ரூபாயை இந்திய அரசு முதலீடு செய்ய உள்ளது.

முதற்கட்டமாக, 2024ஆம் ஆண்டிற்குள், 4 மில்லியன் டன் அளவிலான நிலக்கரி எரிவாயுவை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, 20000 கோடி ரூபாயை முதலீடு செய்ய இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக, 2026 ஆம் ஆண்டிற்குள், 30000 கோடி ரூபாய் செலவில் 6 மில்லியன் டன் நிலக்கரி எரிவாயுவை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இறுதியாக, 2030ம் ஆண்டிற்குள், 3.5 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில், 90 மில்லியன் டன் நிலக்கரி எரிவாயு உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu